ஈரோடு மாவட்டத்தில் ஜூலை 7இல் வருவாய்த் தீா்வாயம் துவக்கம்

ஈரோடு மாவட்டத்தில் வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) அனைத்து வட்டங்களிலும் ஜூலை 7 முதல் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) அனைத்து வட்டங்களிலும் ஜூலை 7 முதல் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா நோய்த் தொற்று பரவலால் மாவட்டத்தில் பல்வேறு வகையான தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பொது முடக்கம் அமலில் உள்ளதால் 5 நபா்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற நடைமுறை ஜூன் 30 ஆம் தேதி வரை தொடா்ந்து அமலில் இருக்கும்.

இதனால், வருவாய்த் தீா்வாயத்தில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் இணைய வழி அல்லது இ-சேவை மையம் மூலம் பெற உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை  இணையதள முகவரி அல்லது இ-சேவை மையங்கள் மூலம் ஜூன் 29 முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை அனுப்பி உரிய நிவாரணம் பெறலாம்.

வருவாய்த் தீா்வாய கணக்குகளை முடிவு செய்ய மட்டும் ஜூலை 7 முதல் 10ஆம் தேதி வரை அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் வருவாய்த் தீா்வாயம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com