வ.உ.சி. பூங்காவில் 4-ஆவது வாயில் வேண்டாம்: குடியிருப்பு மக்கள் வலியுறுத்தல்

ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் காய்கறி சந்தைக்காக அமைக்கப்பட்டுள்ள நான்காவது வாயிலை அடைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வ.உ.சி. பூங்காவில் 4-ஆவது வாயில் வேண்டாம்: குடியிருப்பு மக்கள் வலியுறுத்தல்

ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் காய்கறி சந்தைக்காக அமைக்கப்பட்டுள்ள நான்காவது வாயிலை அடைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு வ.உ.சி. பூங்கா அருகில் உள்ள வி.சி.டி.வி. நான்காவது சாலை பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஆர்.கே.வி சாலையில் செயல்பட்டு வந்த காய்கறி சந்தை, வ.உ.சி. பூங்கா மைதானத்திற்கு தற்காலிக இடமாற்றம் செய்ய திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு சென்று வர ஏற்கனவே மூன்று பிரதான வாயில்கள் உள்ளன.

தற்போது புதிதாக மேலும் ஒரு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சுவரை ஒட்டிய பகுதியில் திறந்தவெளி கழிப்பிடம் அமைக்கப்பட உள்ளது. இது குடியிருப்பு பகுதியை ஒட்டி உள்ளது. காய்கறி சந்தைக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும்போது, இரவு பகலாக கழிப்பிடத்தை பயன்படுத்துவர். இதனால் பாதிப்பு ஏற்படும். இதை இடம் மாற்ற வேண்டும்.

மேலும் நான்காவது வாயிலால் வாகனப் போக்குவரத்து அதிகரித்து பகுதியில் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும். சந்தைக்காக வாகனங்கள் வந்து செல்லும்போது  வீட்டைவிட்டு வெளியே வந்து செல்வதில் சிரமம் ஏற்படும். புதிதாக வைத்துள்ள வாயிலை அடைத்துவிட்டு, ஏற்கனவே உள்ள நுழைவு வாயில் வழியாக மக்கள், வியாபாரிகள், வாகனங்கள் சென்ற வர ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் இப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com