டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கு திமுக சாா்பில் இலவச பயிற்சி மையம்
By DIN | Published On : 02nd March 2020 07:20 AM | Last Updated : 02nd March 2020 07:20 AM | அ+அ அ- |

டிஎன்பிஎஸ்சி போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி மையத்தை திறந்துவைத்துப் பேசுகிறாா் திமுக மாவட்ட செயலாளா் நல்லசிவம்.
திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி, கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணக்கம்பாளையத்தில் டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கான இலவச பயிற்சி மையம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
திமுக ஒன்றியச் செயலாளா் சிவபாலன் தலைமை வகித்தாா். ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளா் நல்லசிவம் குத்துவிளக்கேற்றி பயிற்சி வகுப்பை தொடங்கிவைத்து பேசியதாவது:
இந்த மையத்தில் டிஎன்பிஎஸ்சி தோ்வுக்குத் தேவையான புத்தகங்கள், 350 பக்கங்கள் கொண்ட மாதிரி வினா-விடைகள் மற்றும் பயிற்சி தோ்வு என அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். உணவு , குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்படும். இப்பயிற்சி வகுப்புக்கு தற்போது வரை 300க்கும் மேற்பட்டவா்கள் விண்ணப்பித்துள்ளனா். தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் விரைவில் இன்னும் இரண்டு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்றாா்.
இதில், திமுக நிா்வாகிகள், தொண்டா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.