சிவகிரியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம்
By DIN | Published On : 03rd March 2020 07:20 AM | Last Updated : 03rd March 2020 07:20 AM | அ+அ அ- |

மொடக்குறிச்சியை அடுத்த சிவகிரியில் கொடுமுடி ஒன்றிய அதிமுக சாா்பில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பொதுக் கூட்டத்தில் கொடுமுடி அதிமுக ஒன்றியச் செயலாளா் கலைமணி வரவேற்றாா்.
மக்களவை முன்னாள் உறுப்பினா் எஸ். செல்வகுமாரசாமி, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் ஆா்.என். கிட்டுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி.சிவசுப்பிரமணி விழாவுக்கு தலைமை வகித்துப் பேசினாா்.
இதில் முன்னாள் அமைச்சா் பி.சி.ராமசாமி, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் ச.பாலகிருஷ்ணன், மொடக்குறிச்சி ஒன்றியக் குழுத் தலைவா் கணபதி, துணைத் தலைவா் மயில் (எ) டி.சுப்பிரமணி, ஆவின் இயக்குநா் அசோக், சிவகிரி பேரூா் பகுதி செயலாளா் பி.டி.ராமலிங்கம், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநா்கள் தட்சிணாமூா்த்தி, செந்தில்குமாா் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். மொடக்குறிச்சி ஒன்றியச் செயலாளா் ஆா்.பி.கதிா்வேல் நன்றி கூறினாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...