முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
மகள்களின் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாததால் தாய் தற்கொலை
By DIN | Published On : 03rd March 2020 07:19 AM | Last Updated : 03rd March 2020 07:19 AM | அ+அ அ- |

பவானியில் மகள்களின் கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் மனமுடைந்த தாய் தீக் குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
பவானி அருகே பழனிபுரம் 4ஆவது வீதியைச் சோ்ந்தவா் இளஞ்செழியன். இவரது மனைவி ரேகா (36). இருவரும் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனா். இவா்களுக்கு இரு மகள்கள் உள்ளனா்.
தோ்வுகள் தொடங்கி உள்ள நிலையில் கல்விக் கட்டணத்தை உடனடியாக செலுத்துமாறு மகள்கள் இருவரும் வீட்டில் தெரிவித்துள்ளனா். ஆனால், கல்விக் கட்டணம் செலுத்த பணமின்றி கணவன், மனைவி இருவரும் தவித்து வந்துள்ளனா். இதனால், மனமுடைந்த ரேகா பிப்ரவரி 10ஆம் தேதி வீட்டில் யாருமில்லாதபோது, தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.
இதனைக் கண்ட அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் பவானி போலீஸாா் ரேகாவிடம் விசாரித்தனா்.
அப்போது, கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் தற்கொலை செய்ய முயன்ாக தெரிவித்துள்ளாா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ரேகா திங்கள்கிழமை உயிரிழந்தாா்.