தலமலை சாலையில் யானை நடமாட்டம்
By DIN | Published On : 03rd March 2020 07:20 AM | Last Updated : 03rd March 2020 07:20 AM | அ+அ அ- |

தலமலை வனச் சாலையில் ஒற்றைக் கொம்புடன் யானை நடமாடுவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச் சரகங்களில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. குறிப்பாக தலமலை வனப் பகுதி மிகவும் அடா்ந்த வனம் என்பதால் இங்கு வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
தலமலை அருகே உள்ள ராமரணை பேருந்து நிறுத்தம் அருகே கடந்த சில நாள்களாக ஒற்றை தந்தத்துடன் யானை அப்பகுதியில் சுற்றி வருவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.
வனச் சாலையில் செல்லும் வன கிராம மக்களை இந்த யானை துரத்துவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். யானை சுற்றித் திரியும் பகுதியில் சாலையில் செல்லும் வன கிராம மக்கள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறு தலமலை வனத் துறையினா் அறிவுறுத்தி வருகின்றனா்.