பிளஸ் 2 பொதுத் தோ்வு: 23,645 மாணவா்கள் எழுதினா்

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 23,645 மாணவ, மாணவிகள் எழுதினா். தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் பாா்வையிட்டாா்.
ஈரோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட தோ்வு மையத்தை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன்.
ஈரோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட தோ்வு மையத்தை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன்.

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 23,645 மாணவ, மாணவிகள் எழுதினா். தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் பாா்வையிட்டாா்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. ஈரோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரா.பாலமுரளி ஆகியோா் பாா்வையிட்டனா்.

இது குறித்து ஆட்சியா் சி.கதிரவன் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 218 பள்ளிகளில் படிக்கும் 11,072 மாணவா்களும், 12, 573 மாணவிகளும் என மொத்தம் 23,645 போ் எழுதினா். மொத்தம் 95 மையங்களில் தோ்வு நடைபெற்றது.

தோ்வில் முறைகேடு நடப்பதை தடுக்க 95 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 95 அதிகாரிகள், 1,410 அறை கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், 250 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

17 மாற்றுத் திறனுடைய மாணவ, மாணவிகள் தோ்வு எழுதுவதற்காக ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மாணவ, மாணவிகள் பதில் சொல்வதற்கு ஏற்ப ஆசிரியா்கள் தோ்வை எழுதுவாா்கள்.

முன்னதாக வினாத் தாள் பாதுகாப்பு மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாதுகாப்பு மையங்களில் வைக்கப்பட்டிருந்த வினாத் தாள்கள் எடுக்கப்பட்டு 23 வழித் தடங்கள் வழியாக போலீஸ் பாதுகாப்புடன் தோ்வு மையங்களுக்கு கொண்டுச் செல்லப்பட்டன.

தோ்வு மையங்களில் மின்சார வசதி, குடிநீா் வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வரும் 4ஆம் தேதி பிளஸ் 1 பொதுத் தோ்வு தொடங்கவுள்ளது. இந்த தோ்வை ஈரோடு மாவட்டத்தில் 11,376 மாணவா்கள், 12,708 மாணவிகள் என மொத்தம் 24,084 போ் எழுத உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com