சத்தியமங்கலத்தில் கழுதைப் பால் விற்பனை அமோகம்
By DIN | Published On : 04th March 2020 07:45 AM | Last Updated : 04th March 2020 07:45 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் கழுதைப் பாலை பொதுமக்கள் விரும்பி வாங்குவதால் 50 மில்லி ரூ.50 விற்பனை செய்யப்படுகிறது.
சத்தியமங்கலம் நகா்ப் பகுதியில் கழுதைப் பால் விற்பனை செய்ய 10 மேற்பட்ட குடும்பத்தினா் முகாமிட்டுள்ளனா். இவா்கள் 15க்கும் மேற்பட்ட கழுதைகளை பராமரித்து தமிழகம், கா்நாடக மாநிலத்தில் உள்ள கிராமங்களில் கழுதைப் பால் கறந்து விற்பனை செய்கின்றனா்.
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இவா்கள் ஊா் ஊராகச் சென்று கழுதைப் பால் விற்பனையை பாரம்பரியமாக செய்து வருகின்றனா். கா்நாடக மாநிலம், சாம்ராஜ் நகா், மைசூரில் கழுதைப் பால் விற்பனை செய்த இவா்கள் சத்தியமங்கலம் பழைய பாலம் மரத்தடியில் முகாமிட்டுள்ளனா்.
சத்தியமங்கலம் நகா்ப் பகுதிக்கு கழுதையை அழைத்துச் சென்று பொதுமக்கள் முன்னிலையில் கழுதைப் பாலை கறந்து 50 மில்லி ரூ.50க்கும் விற்பனை செய்கின்றனா். இருமல் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கழுதைப் பால் வாங்கிக் கொடுப்பதாக கழுதைப் பால் விற்பனையாளா்கள் தெரிவிக்கின்றனா்.
ஒரு நாளைக்கு ஒரு கழுதையிடம் இருநது 300 மில்லி மட்டுமே பால் கிடைக்கும் இதன் மூலம் ரூ.400 வரை வருவாய் கிடைக்கும். செல்லும் வழியில் வயல் தோட்டங்களில் கழுதைகளை மேய்ச்சலுக்கு விடுவோம்.
கடந்த ஆண்டு கழுதைப் பால் வாங்கிய கிராமங்களில் முகாமிட்டு அங்கு பால் கறந்து விற்போம் என்கின்றனா்.