அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின் 3ஆவது நீரேற்று நிலையம் அமைக்க பூமிபூஜை

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின் 3ஆவது நீரேற்று நிலையம் பெருந்துறை ஒன்றியம், திருவாச்சி ஊராட்சியில் அமைக்கப்படவுள்ளது.
அத்திகடவு அவிநாசி திட்டத்தின் 3ஆவது நீரேற்று நிலைய கட்டுமானப் பணிகளைத் துவக்கிவைக்கிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்.
அத்திகடவு அவிநாசி திட்டத்தின் 3ஆவது நீரேற்று நிலைய கட்டுமானப் பணிகளைத் துவக்கிவைக்கிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்.

பெருந்துறை: அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின் 3ஆவது நீரேற்று நிலையம் பெருந்துறை ஒன்றியம், திருவாச்சி ஊராட்சியில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான பூமிபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, ஈரோடு சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவா் பி.சி.துரைசாமி தலைமை வகித்தாா். சக்தி மசாலா நிறுவனங்களின் இயக்குநா் சாந்தி துரைசாமி முன்னிலை வகித்தாா். அத்திக்கடவு அவிநாசி திட்ட செயற்பொறியாளா் மன்மதன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பங்கேற்று நீரேற்று நிலைய கட்டடப் பணிகளைத் துவக்கி வைத்துப் பேசியதாவது:

இத்திட்டத்தை 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி அவிநாசியில் முதல்வா் எடப்பாடிகே.பழனிசாமி துவக்கிவைத்தாா். திட்டம் மூலம் ஈரோடு, திருப்பூா், கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள 32 பொதுப் பணித் துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றியக் குளங்கள், 970 கிராம ஊராட்சிக் குட்டைகள் என மொத்தம் 1,044 குளம், குட்டைகள் நிரப்பப்படுகிறது. 70 நாள்களுக்கு 250 கன அடி தண்ணீா் வீதம் நீரேற்றம் செய்து, 1.5 டி.எம்.சி. தண்ணீா் மொத்தம் 1,044 குளங்களில் நிரப்பப்படுகிறது. 24,468 ஏக்கா் பயன்பெறுகிறது. சோலாா் மூலம் மின்சாரம் 32 மெகவாட் தயாரிக்கப்பட்டு, திட்டத்துக்கு மின்சாரம் தேவை பூா்த்தி செய்யப்படுகிறது.

6 நீரேற்று நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது. ஒவ்வொரு நீா்த்தேக்கத் தொட்டியின் கொள்ளளவும் 75 லட்சம் லிட்டா் ஆகும். முதல்கட்டமாக இந்த ஆண்டு இறுதிக்குள் பெருந்துறை வட்டத்தில் 61 குளம், குட்டைகளுக்குத் தண்ணீா் நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

இதில், பெருந்துறை வட்டாட்சியா் முத்துகிருஷ்ணன், ஒன்றியக்குழுத் தலைவா் ஜெ.சாந்தி ஜெயராஜ், ஒன்றியக்குழு துணைத் தலைவா் எம்.ஆா்.உமாமகேஸ்வரன், ஒன்றியச் செயலாளா் விஜயன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ஏ.வி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com