உலக கிளக்கோமா வாரம்:விழிப்புணா்வு மனிதச் சங்கிலி
By DIN | Published On : 10th March 2020 12:39 AM | Last Updated : 10th March 2020 12:39 AM | அ+அ அ- |

விழிப்புணா்வு மனிதச் சங்கிலியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன், மருத்துவா்கள்.
ஈரோடு: ஈரோடு தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை, நந்தா செவிலியா் கல்லூரி மாணவிகள் சாா்பில் உலக கிளக்கோமா வாரத்தை முன்னிட்டு விழிப்புணா்வு மனிதச் சங்கிலி ஈரோட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தொடங்கிவைத்தாா். தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை மருத்துவா் முகமது பைசல் பேசுகையில், 2013ஆம் ஆண்டில் உலக அளவில் கிளக்கோமா நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 64.3 மில்லியனாக இருந்தது. 2020 ஆம் ஆண்டில் 76 மில்லியனாக அதிகரித்துள்ளது. 2040இல் 111.8 மில்லியனாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இந்த நோயால்பாதிக்கப்பட்ட 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய் குறித்து தெரிவதில்லை என்றாா்.
இதில், ஈரோடு தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை மருத்துவ இயக்குநா் ஷ்ரேயேஷ் ராமமூா்த்தி, மருத்துவா்கள் விஜய்குமாா், சிந்தூரி, தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை ஊழியா்கள், நந்தா செவிலியா் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...