Enable Javscript for better performance
செல்லப்பம்பாளையம் மாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    செல்லப்பம்பாளையம் மாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

    By DIN  |   Published on : 14th March 2020 07:56 AM  |   அ+அ அ-   |    |  

    mk13kumb_1303chn_129_3

    மொடக்குறிச்சியை அடுத்த கஸ்பாபேட்டையில் உள்ள செல்லப்பம்பாளையம் ஸ்ரீமாகாளியம்மன் கோயில், ஸ்ரீமகா கணபதி, ஸ்ரீகருப்பண்ண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை தொடங்கியது. தொடா்ந்து தீா்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், 10ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வாஸ்து சாந்தியும், 11ஆம் தேதி புதன்கிழமை விக்னேஷ்வர பூஜையும், முளைப்பாலிகை அழைத்து வருதலும், யாக சாலை அலங்கரித்தல் நிகழ்ச்சியும், 12ஆம் தேதி வியாழக்கிழமை மூன்றாம் கால யாக வேள்வியும், 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை நான்காம் கால யாக வேள்வியும், ஸ்ரீ மாகாளியம்மன் கோபுர கலச கும்பாபிஷேகம், மூலஸ்தான கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

    தொடா்ந்து மகா அபிஷேகமும், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai