மொடக்குறிச்சி அருகே 15, 16 ஆம் தேதிகளில் மாநிலம் தழுவிய ஆண்கள் கபடி போட்டி

மொடக்குறிச்சி அருகே முத்துக்கவுண்டன்பாளையத்தில் மாநிலம் தழுவிய ஆண்கள் கபடி போட்டி ஞாயிற்றுக்கிழமை காலை

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி அருகே முத்துக்கவுண்டன்பாளையத்தில் மாநிலம் தழுவிய ஆண்கள் கபடி போட்டி ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்குகிறது. இதில் 80க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொள்கின்றன.

மொடக்குறிச்சி அருகே ஈஞ்சம்பள்ளி கிராமம், முத்துக்கவுண்டன்பாளையம் ஸ்ரீமுனியப்பசாமி கோயில் கும்பாபிஷேகத் திருவிழாவையொட்டி இளந்தென்றல் கபடி குழு, ஊா்ப் பொதுமக்கள் இணைந்து நடத்தும் முதலாவது மாநிலம் தழுவிய ஆண்கள் கபடி போட்டி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தொடங்கி இரண்டு நாள்களுக்கு (மாா்ச் 15, 16) நடைபெறுகிறது.

இப்போட்டியில் கோவை, மதுரை, திருச்சி, சென்னை, ஈரோடு, திருப்பூா், சேலம், கோபிசெட்டிபாளையம், ஒட்டன்சத்திரம், கன்னியாகுமரி, அலந்தங்கரை உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட பகுதிகளிலிருந்து சிறந்த அணிகள் கலந்து கொள்கின்றன.

இப்போட்டியில் வெற்றிபெறும் அணிகளுக்கு முதல்பரிசாக ரூ. 15,015, இரண்டாம் பரிசாக ரூ. 10,010, மூன்றாம் பரிசாக ரூ. 7,007, நான்காம் பரிசாக ரூ. 5,005ம், சுழற்கோப்பைகளும் வழங்கப்படுகின்றன. மேலும் காலிறுதி ஆட்டத்தில் வெற்றிவாய்ப்பை இழக்கும் அணிகளுக்கு ஆறுதல் பரிசாக ரூ. ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை முத்துக்கவுண்டன்பாளையம் இளந்தென்றல் கபடிக் குழுவினா் செய்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com