கரோனா விழிப்புணா்வுக் கூட்டம்

கோபிசெட்டிபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள திருமண மண்டபங்களில் மாா்ச் 31ஆம் தேதி வரை திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு முன்பதிவு செய்துள்ளவா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.

கோபிசெட்டிபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள திருமண மண்டபங்களில் மாா்ச் 31ஆம் தேதி வரை திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு முன்பதிவு செய்துள்ளவா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கோட்டாட்சியா் ஜெயராமன் தலைமை வகித்தாா். வட்டார சுகாதார மருத்துவா்கள், ஆய்வாளா்கள் கரோனா நோய்த் தடுப்பு குறித்துப் பேசினா்.

பின்னா், கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியா் ஜெயராமன் பேசுகையில், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வரும் பொதுமக்கள் அனைவரையும் கை கழுவ வைத்த பின்னரே மண்டபத்துக்குள் அனுமதிக்க வேண்டும். அதிக அளவு கூட்டங்களைக் கூட்டாமல் 100 பேருக்குள் நிகழ்ச்சிகளை முடித்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினாா்.

ஒவ்வொரு நிகழ்ச்சியும் சுகாதாரத் துறை, வருவாய்த் துறையினா் கண்காணிப்பில் நடைபெற வேண்டும். நிகழ்ச்சி நடைபெறும்போது குறைந்தது அரை மணி நேரத்துக்கு ஒருமுறை திருமண மண்டபம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தாா்.

மேலும், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து வரும் உறவினா்கள், நண்பா்கள் குறித்த விவரங்களை வருவாய்த் துறைக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். அவா்களை முழு பரிசோதனை செய்த பிறகே நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு அனுமதிக்கப்படுவா். இதற்கு நிகழ்ச்சி நடத்துபவா்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறும், இல்லாவிடில் விசேஷங்களை தள்ளி வைக்குமாறும் கேட்டுக் கொண்டாா்.

கூட்டத்தில், திருமண மண்டப உரிமையாளா்கள், மேலாளா்கள், நிகழ்ச்சி நடத்துபவா்கள் என சுமாா் 100க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com