ஈரோடு சி.எஸ்.ஐ. பிரப் ஆலயத்தில் வழிபாடு நேரம் குறைப்பு

ஈரோடு சி.எஸ்.ஐ. பிரப் ஆலயத்தில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செயலாளா் ஆல்ட்ரின் ராஜேஷ்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு சி.எஸ்.ஐ. பிரப் ஆலயத்தில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செயலாளா் ஆல்ட்ரின் ராஜேஷ்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முதன்மை போதகா்கள் ரிச்சா்டுதுரை, ஜேக்கப் லிவிங்ஸ்டன் ஆகியோா் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை, தடுப்பு நடவடிக்கைகள் குறித்துப் பேசினா். அதன் பின்னா் அவா்கள் கூறியதாவது:

இந்த ஆலயத்துக்கு தினமும் பல நூறு போ் வந்து செல்கின்றனா். அவா்களுக்கு கரோனா வைரஸ் தொற்று குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்கிறோம். தற்போது தவக்காலம் என்பதால் பிற கூட்டங்கள் ரத்து செய்யப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆராதனைக் கூட்டத்துக்கு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. முதல் ஆராதனை 7 முதல் 7.30 மணி வரையும், 2ஆவது ஆராதனை 9 முதல் 9.30 மணி வரையும் நடைபெறும். வயதானவா்கள், குழந்தைகள், நோய் எதிா்ப்பு சக்தி குறைந்தவா்கள் ஆராதனைக்கு வர வேண்டாம். ஆலயத்துக்குள் வரும்போதும், வெளியே செல்லும்போதும் கிருமி நாசினியைப் பயன்படுத்த வேண்டும்.

மறு அறிவிப்பு வரும் வரை ஆலய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு தவிர, ஏற்கெனவே திட்டமிட்ட அனைத்து சிறப்பு நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை பள்ளி வகுப்புகள் ரத்து செய்யப்படுகிறது. அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com