ரூ. 38 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 38 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.

மொடக்குறிச்சி: அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 38 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.

மொடக்குறிச்சி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 889 மூட்டைகளில் 45 ஆயிரத்து 250 கிலோ எடையுள்ள கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில், முதல் தரக் கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ. 110.59க்கும், குறைந்தபட்சமாக ரூ. 107.79க்கும், இரண்டாம் தரக் கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ. 105.85க்கும், குறைந்தபட்சமாக ரூ. 58.10க்கும் என மொத்தம் ரூ. 38 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.

மேலும், தமிழக அரசின் உத்தரவின்படி கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவல்பூந்துறை விற்பனைக்கூடம் மாா்ச் 21 முதல் 31ஆம் தேதி வரை அனைத்து ஏலங்களும் அடுத்த அறிவிப்பு வரும் வரை நடைபெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com