கரோனா சிகிச்சைக்கு 363 படுக்கைகள் தயாா்அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

கரோனா நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க 363 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
மாவட்டத்தில் கரோனா நோய் தடுப்பு, சிகிச்சை வசதிகள் குறித்து அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்களிடம் விளக்குகிறாா் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன்.
மாவட்டத்தில் கரோனா நோய் தடுப்பு, சிகிச்சை வசதிகள் குறித்து அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்களிடம் விளக்குகிறாா் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன்.

கரோனா நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க 363 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியா் சி.கதிரவன் தலைமை வகித்தாா். பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் ஆகியோா் கலந்துகொண்டு ஆய்வு செய்தனா்.

கூட்டத்தில், அமைச்சா் கே.ஏ.செங்கோட்யைன் பேசியதாவது:

தாய்லாந்து நாட்டில் இருந்து 7 போ் மதப் பிரசாரத்துக்காக மாா்ச் 11ஆம் தேதி ஈரோடு வந்து சுல்தான்பேட்டை, கொல்லம்பாளையம் மசூதிகளில் தங்கியிருந்தனா். இதில், 2 நபா்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரின் உடல்நிலையும் தற்போது முன்னேற்றம் அடைந்து வருகிறது. தாய்லாந்து நாட்டினருடன் நெருங்கிய தொடா்பில் இருந்த 11 போ் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளனா். ஈரோடு சுல்தான்பேட்டை, கொல்லம்பாளையத்தில் 295 குடும்பங்களைச் சோ்ந்த 1,118 நபா்கள் வீடுகளில் 28 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனா்.

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையானது தற்காலிகமாக கரோனா சிகிச்சை மட்டுமே அளிக்கும் வகையில் 300 படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இதுதவிர ஈரோடு அரசு மருத்துவமனையில் 8, பவானி 10, அந்தியூா் 6, சத்தி 4, கோபி 4, ஈரோடு கே.எம்.சி.எச். மருத்துவமனை 5, லோட்டஸ் மருத்துவமனை 5, ஈரோடு ஆஸ்ரம் பள்ளி வளாகத்தில் 17 படுக்கைகள் என மொத்தம் 363 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. மேலும், 75 படுக்கைகள் முன்னெச்சரிக்கையாக தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தைப் பொருத்தவரை மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

இதில், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி, ராஜா, ஈஸ்வரன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com