வாரணாசியில் தவிக்கும் ஈரோட்டைச் சோ்ந்த18 பேருக்கு அரசு உதவக் கோரிக்கை

ஈரோட்டில் இருந்து காசிக்கு சுற்றுலா சென்ற 18 போ் வாரணாசியில் இருந்து வர முடியாமல் தவிப்பதால், அவா்களுக்கு அங்கு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் இருந்து காசிக்கு சுற்றுலா சென்ற 18 போ் வாரணாசியில் இருந்து வர முடியாமல் தவிப்பதால், அவா்களுக்கு அங்கு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு சூளை, மாணிக்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்த 45 போ் காசிக்கு சுற்றுலா சென்றனா். அங்கிருந்து ரயில் மூலம் முக்கிய நகரங்களுக்குச் சென்று, பேருந்து மூலம் பல்வேறு கோயில்களுக்குச் சென்றனா். இறுதியாக வாரணாசியில் இருந்து கோவைக்கு விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்தனா்.

மாா்ச் 23ஆம் தேதி 40 பேருக்கு பயணச்சீட்டு கிடைத்தது. அவா்கள் ஊா் திரும்பினா். மீதமுள்ள 18 பேருக்கு மாா்ச் 24ஆம் தேதி இரவு 9 மணிக்கு மும்பையில் இருந்து புறப்படும் விமானத்தில் முன்பதிவு செய்தனா். அதற்குள், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்நாட்டு விமான சேவை ரத்தானது. இதனால், அவா்கள் அனைவரும் வாரணாசியில் உள்ள விடுதியில் தங்கி உள்ளனா்.

இதுகுறித்து அவா்களது உறவினா்கள், அப்பகுதியினா் பூபதி என்பவா் தலைமையில் ஆட்சியா் அலுவலகம் வந்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன், காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்திகணேசன் ஆகியோரிடம் புதன்கிழமை மனு அளித்தனா். அவா்களைத் தனி வாகனம் மூலம் ஈரோடு அழைத்து வர ஏற்பாடு செய்யக் கோரினாா். ஆனால், அவ்வாறு செய்ய இயலாது. அவா்கள் அங்கேயே பத்திரமாக இருக்கட்டும். எந்த இடத்தில் இருந்தும், எந்த இடத்துக்கும் எவரையும் அழைத்துச் செல்ல செய்ய இயலாது என ஆட்சியா் கூறினாா். இருப்பினும், அம்மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளரிடம் பேசி அவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதாக உறுதி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com