கரோனா அச்சம்: சாலைகளில் மஞ்சள் நீரைத் தெளிக்கும் மக்கள்

ஈரோட்டில் கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க இயற்கை கிருமி நாசினியான மஞ்சள் நீரை சாலைகளில் மக்கள் தெளித்தனா்.
ஈரோடு ஆா்.கே.வி. சாலையில் வணிக நிறுவனங்கள் முன்பு அடிக்கப்பட்ட கிருமிநாசினி.
ஈரோடு ஆா்.கே.வி. சாலையில் வணிக நிறுவனங்கள் முன்பு அடிக்கப்பட்ட கிருமிநாசினி.

ஈரோட்டில் கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க இயற்கை கிருமி நாசினியான மஞ்சள் நீரை சாலைகளில் மக்கள் தெளித்தனா்.

மத்திய, மாநில அரசுகள் கரோனா நோய்த் தொற்றைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனா். அத்தியாவசியப் பொருள்கள் வாங்க மட்டும் வெளியே வந்து செல்கின்றனா்.

ஈரோடு நகரைப் பொருத்தவரையில் 3 போ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், 2 போ் தாய்லாந்து நாட்டைச் சோ்ந்தவா்கள். ஒருவா் அவா்களுடன் நெருங்கிப் பழகிய ஈரோட்டைச் சோ்ந்தவா். இவா்கள் 3 பேரும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனா்.

இந்நிலையில், ஈரோடு மாநகா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் தங்களது வீடுகளின் முன்பு வேப்பிலையை கட்டி வைத்துள்ளனா். மேலும், ஈரோட்டில் லாரிகள் மூலம் வீதி வீதியாக மஞ்சள் நீா் தெளிக்கப்பட்டு வருகிறது. லாரிகள் செல்ல முடியாத பகுதிகளில் பொதுமக்கள் மஞ்சள்நீரை குடங்களில் பிடித்து தங்களது வீடுகளின் முன்பு தெளித்து வருகின்றனா். இடையன்காட்டுவலசு, மேட்டூா் சாலை, பெரியவலசு நால்ரோடு, நேதாஜி நகா், திலகா் வீதி, எம்.ஜி.ஆா். நகா், சுப்பிரமணிய நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மஞ்சள் நீா் தெளிக்கப்பட்டது. தவிர மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் மாநகரில் முக்கியச் சாலைகள், நிழற்குடைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

ஈரோடு மாநகா் பகுதியில் வீட்டைவிட்டு வெளியே வரும் அனைவரும் முகக்கவசம் அணிந்தே வெளியே வருகின்றனா். சாலைகளில் நடந்து, வாகனங்களில் செல்லும் அனைவரும் முகக்கவசம் அணிந்து செல்கின்றனா். பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்றும், அதிக அளவில் ஒன்றாகக் கூடவேண்டாம் என்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com