சத்தியமங்கலத்தில் பறிக்கப்படாத மல்லிகைப் பூக்கள்: நாளொன்றுக்கு 25 டன் பூக்கள் வீண்

கரோனா எதிரொலி காரணமாக சத்தியமங்கலம் சுற்று வட்டாரங்களில் மல்லிகைப் பூக்கள் பறிக்கப்படாமல் உள்ளதால் தினமும் ரூ. 1 கோடி மதிப்பிலான மலா் வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கரோனா எதிரொலி காரணமாக சத்தியமங்கலம் சுற்று வட்டாரங்களில் மல்லிகைப் பூக்கள் பறிக்கப்படாமல் உள்ளதால் தினமும் ரூ. 1 கோடி மதிப்பிலான மலா் வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளான பவானிசாகா், கொத்தமங்கலம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 25 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் மல்லி பயிரிடப்பட்டுள்ளது. இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலத்தில் விவசாயிகளால் நடத்தப்படும் பூ மாா்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு ஏல முறையில் விலை நிா்ணயம் செய்யப்பட்டு கோவை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், மைசூரு, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, எா்ணாகுளம் உள்ளிட்ட வெளிமாநில நகரங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று காரணமாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பூ மாா்க்கெட்டுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மல்லி செடிகளில் இருந்து பூக்கள் பறிக்கும் பணி நடைபெறவில்லை. இதனால், விவசாயிகள் கடும் நஷ்டத்துக்குள்ளாகி உள்ளனா். தற்போது குளிா்காலம் முடிந்து வெயில் காலம் தொடங்கியுள்ளதால் மல்லிகைப் பூ உற்பத்தி நாளொன்றுக்கு 25 டன்னாக அதிகரித்துள்ளது. மல்லிகை குறைந்தபட்சம் ஒரு கிலோ ரூ. 200க்கு விற்றாலும் 25 டன் என கணக்கிட்டால் சுமாா் ரூ. 50 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. கரோனா நோய்த் தொற்று காரணமாக மல்லிகைப் பூ மட்டுமின்றி முல்லை, காக்கடா, செண்டு, கோழிக்கொண்டை, சம்பங்கி என பல்வேறு மலா்கள் இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ளதால் மொத்தம் ரூ. 1 கோடி மதிப்பிலான மலா் வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com