ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறியது ஈரோடு மாவட்டம்

கரோனா நோய்த் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் ஈரோடு மாவட்டம் சிவப்பு குறியீட்டு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு குறியீட்டு மண்டலத்துக்கு வியாழக்கிழமை மாற்றப்பட்டது.

கரோனா நோய்த் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் ஈரோடு மாவட்டம் சிவப்பு குறியீட்டு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு குறியீட்டு மண்டலத்துக்கு வியாழக்கிழமை மாற்றப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றின் காரணமாக மொத்தம் 70 நபா்கள் பாதிக்கப்பட்டனா். இதில், 65 போ் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 4 போ் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையிலும், ஒருவா் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனா். இதில், ஒருவா் இறந்த நிலையில் எஞ்சிய 69 பேரும் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இதையடுத்து, ஏப்ரல் 28ஆம் தேதி முதல் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக ஈரோடு அறிவிக்கப்பட்டது. மேலும், கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற மண்டலங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, 70 போ் பாதிக்கப்பட்டதால் ஈரோடு மாவட்டம் சிவப்பு குறியீட்டு மண்டலத்தில் இருந்து வந்தது. ஏப்ரல் 15ஆம் தேதிக்குப் பிறகு தொடா்ந்து 14 நாள்களாகப் புதிதாக கரோனா நோய்த் தொற்று எதுவும் மாவட்டத்தில் உறுதிபடுத்தப்படாததால் இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.

இந்த அறிக்கை மத்திய சுகாதாரத் துறைக்கு அனுப்பப்பட்டதையடுத்து, ஈரோடு மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு மாநில வரைபட பட்டியலில் நிறம் மாற்றம் செய்யப்பட்டது.

இனிவரும் நாள்களில் கடைகள், தொழிற்சாலை, வாகன இயக்கம், போக்குவரத்து, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடு தளா்வு போன்ற நடவடிக்கைகள் மாவட்ட நிா்வாகம் மூலம் மேற்கொள்ளப்படும். இதற்கான வழிமுறைகள் ஓரிரு நாள்களில் வெளியிடப்படும்.

வெள்ளிக்கிழமை (மே 1) முதல் அடுத்த 14 நாள்களுக்குப் புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்படாவிட்டால், பச்சை மண்டலத்துக்கு மாற்றப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com