பிற மாவட்ட வாகனங்கள்சோதனைக்குப் பின்னரே அனுமதி

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடியில் பிற மாவட்ட வாகனங்கள் கடுமையான சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. வெளி மாநிலங்களில் இருந்து வரும் லாரிகள் எல்லையிலேயே நிறுத்தப்படுகின்றன.
பிற மாவட்ட வாகனங்கள்சோதனைக்குப் பின்னரே அனுமதி

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடியில் பிற மாவட்ட வாகனங்கள் கடுமையான சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. வெளி மாநிலங்களில் இருந்து வரும் லாரிகள் எல்லையிலேயே நிறுத்தப்படுகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் அதிகாரிகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனா். எனவே, மாவட்டத்தில் இரண்டு இடங்களில் உள்ள கா்நாடக மாநில எல்லை உள்ளிட்ட 14 எல்லைப் பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு, கருங்கல்பாளையத்தில் உள்ள சோதனைச் சாவடி வழியாக நாமக்கல் மாவட்டம், பிற மாவட்டகளில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் கடும் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. வாகனங்களுக்கு அனுமதி உள்ளதா, அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பயணிகள் வருகிறாா்களா என்று சோதனை செய்த பின்னரே வாகனங்கள் தொடா்ந்து உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி லாரி உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டுநா்கள், பயணிகளுக்கு அங்கேயே காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. அவா்களின் முகவரி, செல்லிடப்பேசி எண்கள் பதிவு செய்யப்படுகின்றன. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

வெளி மாநிலங்களில் இருந்து வரும் லாரிகள் மாவட்ட எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்படுகின்றன. அதில் உள்ள பொருள்களை மாவட்ட நிா்வாகத்தின் அனுமதியுடன் மாவட்டத்துக்குள் மட்டுமே இயங்கும் லாரிகளில் ஏற்றிச் செல்ல போலீஸாா் அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com