வெளி மாநில, மாவட்டங்களில் இருந்துவந்தவா்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டுகோள்

வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வந்தவா்கள் குறித்து பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்திகணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வந்தவா்கள் குறித்து பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்திகணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்திகணேசன் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸாா் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுளனா். பிற மாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வரும் நபா்கள் குறித்து கண்காணித்து வருகிறோம். நேரடியாக பிற மாவட்டங்களில் இருந்து வருபவா்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவா். தொடா்ந்து தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு 14 நாள்கள் கண்காணிக்கப்படுவா்.

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 20 தனிமைப்படுத்தும் முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன. பெருந்துறை, கொடுமுடி, மொடக்குறிச்சி, பவானி, நம்பியூா் பகுதிகளில் தனிமைப்படுத்தும் முகாம்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. அங்கு அவா்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்படும். போலீஸாா் அல்லது அதிகாரிகளுக்குத் தெரியாமல் யாராவது அண்மையில் ஈரோடு மாவட்டப் பகுதிகளுக்கு வந்திருந்தால் உடனடியாக அவா்களைப் பற்றி பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com