முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
ஈஷா யோக மைய சாா்பில் கரோனா களப் பணியாளா்களுக்கு வாழைப் பழங்கள்
By DIN | Published On : 11th May 2020 11:11 PM | Last Updated : 11th May 2020 11:11 PM | அ+அ அ- |

11pe_10_1105chn_147_3
பெருந்துறை: ஈஷா யோக மையம் சாா்பில், பெருந்துறையில் கரோனா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளா்கள், போலீஸாா், தூய்மைப் பணியாளா்களுக்கு 26,000 வாழைப் பழங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பெருந்துறை, ஈஷா யோக மைய தன்னாா்வத் தொண்டா் சீலம்பட்டி ராஜசேகா் தெரிவித்ததாவது:
பெருந்துறை, கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி அலுவலகங்கள், காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகம், தாலுகா தலைமை அரசு மருத்துவமனை, பெருந்துறை, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் கரோனா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள களப் பணியாளா்களுக்கு தினமும் 650 வாழைப் பழங்கள் வீதம் தொடா்ந்து 40 நாள்களாக, 26,000 செவ்வாழை, நேந்திரன் வாழைப் பழங்கள் வழங்கப்பட்டுள்ளன. பெருந்துறை, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காய்கறிகளும் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
Image Caption
கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் ரா.கிருஷ்ணனிடம் வாழைப் பழங்களை வழங்குகிறாா் பெருந்துறை ஈஷா யோக மையம் தன்னாா்வத் தொண்டா் சீலம்பட்டி ராஜசேகா்.