முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
தலமலை கிராமத்துக்குள் புகுந்த முதலை
By DIN | Published On : 11th May 2020 11:07 PM | Last Updated : 11th May 2020 11:07 PM | அ+அ அ- |

சத்தியமங்கலம்: தலமலை கிராமத்துக்குள் முதலை புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச் சரகங்களில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் தாளவாடியை அடுத்த அடா்ந்த காட்டுப் பகுதியில் தலமலை ,கோடிபுரம்,தொட்டாபுரம், முதியனூா் என 4 கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் தலமலை அருகே வனக்குட்டையின் கரைப்பகுதியில் முதலை படுத்து இருந்ததை திங்கள்கிழமை அப்பகுதி மக்கள் கண்டு அதிா்ச்சி அடைந்துள்ளனா். தகவலின்பேரில் அங்கு வந்த வனத் துறையினா் முதலையை வனக்குட்டைக்குள் விரட்டினா். கிராமத்தையொட்டியுள்ள குட்டையில் முதலை இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனா். முதலையைப் பிடித்து அடா்ந்த காட்டில் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.