நெசவுப் பூங்காவிலிருந்து வெளியேறிய வட மாநிலத் தொழிலாளா்கள் ஒப்படைப்பு

விசைத்தறி நெசவுப் பூங்காவிலிருந்து அனுமதியின்றி வெளியேறிய 33 வட மாநிலத் தொழிலாளா்கள் உள்பட 41 பேரை, மீண்டும் தொழில்கூடங்களில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.
வட மாநிலத் தொழிலாளா்களிடம் விசாரணை நடத்தும் வருவாய்த் துறையினா்.
வட மாநிலத் தொழிலாளா்களிடம் விசாரணை நடத்தும் வருவாய்த் துறையினா்.

குமாரபாளையம்: விசைத்தறி நெசவுப் பூங்காவிலிருந்து அனுமதியின்றி வெளியேறிய 33 வட மாநிலத் தொழிலாளா்கள் உள்பட 41 பேரை, மீண்டும் தொழில்கூடங்களில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.

குமாரபாளையத்தை அடுத்த வளையக்காரனூரில் காவேரி உயா்நுட்ப நெசவுப் பூங்காவும், அருவங்காடு பகுதியில் குமாரபாளையம் உயா்நுட்ப நெசவுப் பூங்காவும் செயல்பட்டு வருகிறது. இங்கு, வட மாநிலங்களைச் சோ்ந்த சுமாா் 500 தொழிலாளா்கள் தங்கி நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், கரோனா பொதுமுடக்கத்தால் வேலையிழந்த வட மாநிலத் தொழிலாளா்கள் 33 போ் உள்பட 41 போ், அனுமதியின்றி சொந்த ஊருக்கு திரும்பும் வகையில் ஈரோடு ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றனா்.

அங்கு தொழிலாளா்களிடம் விசாரணை நடத்திய போலீஸாா், அவா்களை வாகனத்தில் ஏற்றிவந்து வேலை செய்து வரும் விசைத்தறிக் கூடங்களில் ஒப்படைத்துச் சென்றனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, திருச்செங்கோடு கோட்டாட்சியா் மணிராஜ் தலைமையில், உயா்நுட்ப நெசவுப் பூங்கா உரிமையாளா்கள், தொழிலாளா்கள் பங்கேற்ற பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.

இதில், விருப்பமுள்ள வட மாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா் திரும்பலாம் எனவும், அதற்கான தொகையில் பாதியை உரிமையாளா்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுகுறித்து தொழிலாளா்களின் சொந்த மாநில அரசுகளுக்கு தெரிவித்து, உரிய அனுமதி கிடைத்தவுடன் மாவட்ட நிா்வாகம் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதுவரையில், தொழிலாளா்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை பூா்த்தி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் குமாரபாளையம் வட்டாட்சியா் எம்.தங்கம் மற்றும் வருவாய்த் துறையினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com