ஈரோட்டில் 2,300 பேருக்கு தலா 5 கிலோ அரிசி: எம்எல்ஏ.,க்கள் வழங்கினர்

ஈரோடு நசியனூர் சலையில் உள்ள அடுக்குப்பாறை பகுதியில் 2,300 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, முகக்கவசம் போன்றவற்றை எம்எல்ஏ.க்கள் வழங்கினர்.
ஈரோட்டில் 2,300 பேருக்கு தலா 5 கிலோ அரிசி: எம்எல்ஏ.,க்கள் வழங்கினர்

ஈரோடு நசியனூர் சலையில் உள்ள அடுக்குப்பாறை பகுதியில் 2,300 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, முகக்கவசம் போன்றவற்றை எம்எல்ஏ.க்கள் வழங்கினர்.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈரோடு கிழக்கு, மேற்கு தொகுதி எம்எல்ஏ.க்கள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.              

இதில் ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட 9வது வார்டு அடுக்குப்பாறை பகுதியில் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு அதிமுக சூரியம்பாளையம் பகுதி கழக அவைத் தலைவர் தங்கமுத்து தலைமை வகித்தார். மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் வீரக்குமார் முன்னிலை வகித்தார். 

இதில், சிறப்பு அழைப்பாளராக ஈரோடு மேற்கு தொகுதி எம்எல்ஏ கே.வி.இராமலிங்கம், கிழக்கு தொகுதி எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு 2,300 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, முகக் கவசம் போன்றவற்றை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com