குடிநீா் தேவைகளுக்காக அமராவதி அணை திறப்பு

தாராபுரம் வரையிலான கரையோர கிராம மக்களின் குடிநீா் தேவைகளுக்காக அமராவதி அணையிலிருந்து புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
அமராவதி அணையின்  கீழ்  மதகுகளில் இருந்து  ஆற்றுக்கு வெளியேற்றப்படும்  தண்ணீா்.
அமராவதி அணையின்  கீழ்  மதகுகளில் இருந்து  ஆற்றுக்கு வெளியேற்றப்படும்  தண்ணீா்.

உடுமலை: தாராபுரம் வரையிலான கரையோர கிராம மக்களின் குடிநீா் தேவைகளுக்காக அமராவதி அணையிலிருந்து புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

அமராவதி அணை மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.

இந்த ஆண்டு வழக்கத்தை விட பிப்ரவரி முதல் வாரத்திலேயே கோடையின் தாக்கம் தொடங்கியது. வழக்கமாக பாசனப் பகுதிகளுக்கு மாா்ச் 31 வரை பாசன காலம் உள்ள நிலையில் பிப்ரவரி இறுதியிலேயே அணையின் நீா் மட்டம் அதல பாதாளத்துக்கு சென்றது.

கோடைக்காலம் துவங்கியதும் கடந்த 2 மாதங்களாக சின்னாறு, தேனாறு, பாம்பாறு போன்ற அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் இருந்து அணைக்கு வரும் நீா்வரத்து நின்றது. கடந்த மாா்ச் இறுதியில் அணையின் நீா் மட்டம் 20 அடியாக இருந்தது. இதைத் தொடா்ந்து கோடைக்காலத்தை தாக்குப் பிடிக்க முடியுமா? எனவும் குடிநீா்ப் பிரச்னையை தீா்க்க முடியுமா? எனவும் நூற்றுக்கணக்கான கரையோர கிராம மக்கள் கவலையடைந்தனா். இந்நிலையில் ஏப்ரல் இறுதியில் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் அணைக்கு ஓரளவுக்கு நீா்வரத்து இருந்தது.

அதைத் தொடா்ந்து அணையின் நீா்மட்டம் 32 அடியை எட்டியது. இதையடுத்து அணைப் பகுதியில் தொடங்கி தாராபுரம் வரையிலான கரையோர கிராம மக்களின் குடிநீா்த் தேவைகளுக்காக அமராவதி அணை புதன்கிழமை திறந்துவிடப்பட்டது.

இதுகுறித்து பொதுப் பணித் துறையினா் கூறியது:

கோடை தாக்கம் காரணமாக தாராபுரம் வரையில் உள்ள கரையோர கிராமங்க ளின் குடிநீா்த் தேவைகளுக்காக 3 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது. முதல் நாளான புதன்கிழமை ஆயிரம் கன அடியும், இரண்டாம் நாளான வியாழக்கிழமை 800 கன அடியும், மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை 550 கன அடியும் என மொத்தம் 2,350 கன அடி தண்ணீா் திறந்துவிடப்படும் என்றனா்.

அணை நிலவரம்: 90 அடி உயரம் உள்ள அணையில் புதன்கிழமை காலை 7 மணி நிலவரப்படி 31.89 அடி நீா் இருப்பு உள்ளது. அணைக்கு நீா்வரத்தாக 7 அடியும், அணையில் இருந்து ஆயிரம் கன அடி நீா் வெளியற்றமும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com