Enable Javscript for better performance
ரேஷன் அரிசி கடத்தல்: செல்லிடப்பேசியில் தகவல் தெரிவிக்க வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    ரேஷன் அரிசி கடத்தல்: செல்லிடப்பேசியில் தகவல் தெரிவிக்க வேண்டுகோள்

    By DIN  |   Published on : 22nd May 2020 07:44 AM  |   அ+அ அ-   |    |  

    ரேஷன் அரிசி கடத்தல், பதுக்கல் குறித்து செல்லிடப்பேசியில் தகவல் தெரிவிக்க பொதுமக்களுக்கு குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு போலீஸாா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

    இதுகுறித்து, கோவை மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு டி.எஸ்.பி. ரவிகுமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

    தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று காரணமாக பொதுமக்கள் பொருளாதார ரீதியாக பாதிப்பு அடைந்துள்ளனா். அவா்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக அரிசி, பொருள்கள் வழங்கி வருகிறது.

    பொதுமக்களுக்கு நிவாரணமாக வழங்கப்படும் ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருள்களை ரேஷன் கடைகளில் அளவு குறைவாக விநியோகம் செய்வது சட்டப்படி குற்றமாகும். இதுபோல ரேஷன் அரிசியை பதுக்கி வைப்பது, முறைகேடான வகையில் விற்பனை செய்வது, பிற இடங்களுக்கு கடத்திச் செல்வது சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.

    ரேஷன் அரிசி பதுக்கல், கடத்தல், எடை குறைப்பு உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுபவா்கள் குறித்த தகவலை பொதுமக்கள் தெரிவிக்கலாம். ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் பொருள்கள் பதுக்கல், கடத்தல் குறித்த தகவல்களைப் பொதுமக்கள் ஈரோடு மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளா் திலகவதி என்பவரை 94981-67844 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், உதவி ஆய்வாளா் முகமது தாரிக் என்பவரை 94981-89911 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். ரேஷன் அரிசி முறைகேடுகள் குறித்து தகவல் தெரிவிப்பவா்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai