ரயில் பாதையில் கல் வைத்த வழக்கு: இளைஞர்கள் இருவர் கைது

ரயில் பாதையில் கல் வைத்த வழக்கில் இரண்டு பேரை போலீஸார் இன்று கைது செய்தனர்.
ரயில் பாதையில் கல் வைத்த வழக்கு: இளைஞர்கள் இருவர் கைது

ஈரோடு: ரயில் பாதையில் கல் வைத்த வழக்கில் இரண்டு பேரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

ஈரோடு ரயில்வே காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மகுடஞ்சாவடி - மாவேலிபாளையம் ரயில் நிலையங்களுக்கு இடையே ஆலங்காடு புதுப்பாளையம் என்ற இடத்தில் ரயில் பாதையில் கடந்த 18 ஆம் தேதி 5.5 அடி நீளம் உள்ள கான்கிரீட் கல் வைக்கப்பட்டிருந்தது. அப்போது அந்த வழியாக மெதுவாக வந்த சரக்கு ரயில் அந்த கல்லில் மோதி நின்றது.

இதைத்தொடர்ந்து ரயில் இன்ஜின் ஓட்டுநர் கொடுத்த தகவலின் பேரில் ஈரோடு ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை பிடிக்க கோவை ரயில்வே கோட்ட டி.எஸ்.பி அண்ணாதுரை மற்றும் ஈரோடு ரயில்வே காவல் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை காவல்துறையினர் இன்று காலை புதுப்பாளையம் பகுதியில் சுற்றித்திருந்த 2 இளைஞர்களை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள பாரப்பட்டி, மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பாபு(27), பாரப்பட்டி, பூசாரி நாயக்கர் தெருவை சேர்ந்த நாகலிங்கம்(25) என்பதும், இவர்கள் இரண்டி பேரும் சேர்ந்து தான் ரயில் பாதையில் கான்கிரீட் கல்லை வைத்து தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து காவல்துறையினர் இரண்டு பேரையும் கைது செய்தனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்த காவல்துறையினரை ரயில்வே காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு பாராட்டி ரூ.5,000 வெகுமதி வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com