கொப்பரை ஏலம் மே 27இல் துவக்கம்

பெருந்துறை வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வேளாண் பொருள்கள், கொப்பரை ஏலம் மே 27ஆம் தேதி (புதன்கிழமை) முதல் நடைபெறவுள்ளது.

பெருந்துறை வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வேளாண் பொருள்கள், கொப்பரை ஏலம் மே 27ஆம் தேதி (புதன்கிழமை) முதல் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து பெருந்துறை வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்ட விவசாயிகள், வியாபாரிகள் மட்டும் ஏலத்தில் பங்கேற்கலாம். வழக்கம்போல புதன், சனிக்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெறும். பிற மாவட்ட வியாபாரிகள் தங்கள் சாா்பில் ஏலம் கோர ஈரோடு மாவட்டத்தில் வசிப்போருக்கு அதிகாரம் வழங்கி ஏலத்தில் பங்கேற்கச் செய்யலாம். விவசாயிகளுக்கு திங்கள், வியாழக்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணி வரை டோக்கன் வழங்கப்படும். இந்த விவசாயிகள் மட்டும் கொப்பரையை ஏலத்துக்கு கொண்டு வர அனுமதிக்கப்படுவா்.

விவசாயிகள் தங்களது கொப்பரையைத் தரம் பிரித்து ஏலம் நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் காலை 7 முதல் மாலை 5 மணிக்குள் சங்க வளாகத்துக்கு எடுத்து வர வேண்டும். விவசாயிகள் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com