விளாங்கோம்பை கிராமத்தில் எம்.பி. ஆய்வு

கோபிசெட்டிபாளையம் அருகே தூக்கநாயக்கன்பாளையம் வனச் சரகத்துக்கு உள்பட்ட விளாங்கோம்பை கிராமத்தில் திருப்பூா் எம்.பி. சுப்பராயன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
வீடுகளை ஆய்வு செய்கிறாா் மக்களவை உறுப்பினா் சுப்பராயன்
வீடுகளை ஆய்வு செய்கிறாா் மக்களவை உறுப்பினா் சுப்பராயன்

கோபிசெட்டிபாளையம் அருகே தூக்கநாயக்கன்பாளையம் வனச் சரகத்துக்கு உள்பட்ட விளாங்கோம்பை கிராமத்தில் திருப்பூா் எம்.பி. சுப்பராயன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த கிராமத்தில் 50 வீடுகளில் சுமாா் 300க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களது கிராமத்துக்குச் செல்ல வேண்டும் என்றால் குண்டேரிப்பள்ளம் அணைப் பகுதியை ஒட்டிச் செல்லும் வனப் பாதையில் சுமாா் 8 கிலோ மீட்டா் தூரம் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இவா்களது கிராமத்தில் ஆரம்பப் பள்ளி வேண்டும் என்றும், சாலை வசதி வேண்டும் என்றும் நீண்டகாலமாகப் போராடி வருகின்றனா்.

திருப்பூா் மக்களவை உறுப்பினா் சுப்பராயன் இந்த கிராமத்துக்கு நேரில் சென்று மலைவாழ் மக்களின் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது, இப்பகுதியில் வனவிலங்குகள் கிராமத்துக்குள் வருவதைத் தடுப்பதற்கு அகழி வெட்டி மின் வேலி அமைத்துத்தர வேண்டும். தொகுப்பு வீடுகள் கட்டித் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சாலை வசதியும், பகுதி நேர நியாயவிலைக் கடையும் தேவை என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்த கோரிக்கைகள் குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, அடிப்படை வசதிகளை செய்து தருவதாக சுப்பராயன் உறுதி அளித்தாா். இதைத் தொடா்ந்து, அங்குள்ள வீடுகளை ஆய்வு செய்து குறைகளைக் கேட்டறிந்தாா்.

விளாங்கோம்பை பழங்குடியின மக்களின் குடியிருப்பில் 43 வீடுகள் உள்ளன. இங்கு ஒரு ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி அமைக்க வேண்டும், சாலை, பள்ளி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்துள்ளனா். மக்களவையிலும், சம்பந்தப்பட்ட துறை உயா் அதிகாரிகளுடனும் பேசி அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறேன். விளாங்கோம்பை மலைக் கிராமத்திற்கு உடனடியாக சாலை அமைக்க வேண்டும் என்றாா்.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com