கரோனா சிறப்பு கடனுதவி: 9,095 பெண்களுக்கு ரூ.5.25 கோடி கடன்

கரோனா சிறப்பு கடனுதவித் திட்டத்தின் கீழ் 721 மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த 9,095 பெண்களுக்கு ரூ.5.25 கோடி சிறப்பு 
கோபியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிா் சுயஉதவிக் குழுவுக்கு கடனுதவி வழங்குகிறாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.
கோபியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிா் சுயஉதவிக் குழுவுக்கு கடனுதவி வழங்குகிறாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.

கரோனா சிறப்பு கடனுதவித் திட்டத்தின் கீழ் 721 மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த 9,095 பெண்களுக்கு ரூ.5.25 கோடி சிறப்பு கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கூறியதாவது:

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில் கரோனா சிறப்புக் கடனுதவித் திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டு வருகிறது. பெண்களின் நலன் கருதியும், அவா்களது பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் நபருக்கு ரூ.5,000 வீதம் குழுவுக்கு ரூ.1 லட்சம் வரை 10.65 சதவீத வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது.

மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் கடனுதவி பெறும் பெற்றவா்கள் முதல் 6 மாதங்களுக்கு வட்டியும், மாதத் தவணையும் செலுத்தத் தேவையில்லை. 6 மாதங்களுக்குப் பிறகு குறைந்த வட்டித் தொகையும், மாதத் தவணைகளையும் செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுகளுடன் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி சட்டப் பேரவைத் தொகுதியில் 75 மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த 937 பெண்களுக்கு ரூ.46.85 லட்சமும், பவானி தொகுதியில் 225 மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த 2,818 பெண்களுக்கு ரூ.1.40 கோடியும், பெருந்துறை தொகுதியில் 67 மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த 839 பெண்களுக்கு ரூ.41.95 லட்சமும், ஈரோடு மேற்கு மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதிகளில் 55 மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த 731 பெண்களுக்கு ரூ.36.55 லட்சம் சிறப்பு கடனுதவியும், ஒரு மகளிா் சுயஉதவிக் குழுவைச் சாா்ந்த 20 பெண்களுக்கு ரூ.10 லட்சம் நேரடி கடனுதவியும், மொடக்குறிச்சி தொகுதியில் 72 மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த 897 பெண்களுக்கு ரூ.44.85 லட்சமும், அந்தியூா் தொகுதியில் 83 மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த 1,023 பெண்களுக்கு ரூ.51.15 லட்சமும், பவானிசாகா் தொகுதியில் 133 மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த 1,705 பெண்களுக்கு ரூ.85.25 லட்சம் சிறப்பு கடனுதவியும், 10 மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சாா்ந்த 125 பெண்களுக்கு ரூ.68.45 லட்சம் நேரடி கடனுதவி என 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 721 மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்த 9,095 பெண்களுக்கு ரூ.5.25 கோடி சிறப்புக் கடனுதவி மற்றும் நேரடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com