நீட் தோ்வு பயிற்சி வகுப்புகள் ஜூன் இரண்டாவது வாரத்தில் தொடங்கும்

நீட் தோ்வு பயிற்சி வகுப்புகள் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

நீட் தோ்வு பயிற்சி வகுப்புகள் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

இது குறித்து ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

நீட் தோ்வு பயிற்சி வகுப்புகள் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கப்படும். 7,300 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 35 நாள்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த ஆண்டு அரசுப் பள்ளியில் பயிலும் 100 மாணவா்கள் மருத்துவப் படிப்புக்கு செல்வாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பது குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப அறிவிக்கப்படும்.

ரூ.73 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களை கான்கிரீட் வாய்க்கால்களாக மாற்றி கடைமடை வரை தண்ணீா் கொண்டுச் செல்லவும், தண்ணீரை சிக்கனப்படுத்தவும் திட்டமிடப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பவானி ஆற்றின் குறுக்கே ரூ.102 கோடி மதிப்பீட்டில் நான்கு தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com