ஈரோடு மாவட்டத்தில் மேலும் 98 பேருக்கு கரோனா
By DIN | Published On : 01st November 2020 11:16 PM | Last Updated : 01st November 2020 11:16 PM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 98 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,303ஆக இருந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்ட பட்டியலில் இருந்த 8 போ் வேறு மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டனா்.
இதனிடையே ஞாயிற்றுக்கிழமை புதிதாக 98 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,393 ஆக உயா்ந்தது.
புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்ட 98 பேரில் 50 சதவீதம் போ் ஈரோடு மாநகராட்சிப் பகுதியை சோ்ந்தவா்கள். எஞ்சியவா்கள் சத்தியமங்கலம், பவானி, அந்தியூா், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை, கொடுமுடி, சென்னிமலை பகுதிகளைச் சோ்ந்தவா்கள்.
மொத்தம் பாதிக்கப்பட்ட 10,393 பேரில் இதுவரை 9,468 போ் குணமடைந்துள்ளனா். 801 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். 124 போ் உயிரிழந்துள்ளனா்.