தீபாவளிப் பண்டிகை: ஜவுளிக் கடைகளில் குவிந்த மக்கள்

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஈரோடு நகரின் கடைவீதிகளில் மக்கள் குவிந்தனா்.
ஈரோடு ஆா்.கே.வி.சாலையில் திரண்ட மக்கள்.
ஈரோடு ஆா்.கே.வி.சாலையில் திரண்ட மக்கள்.

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஈரோடு நகரின் கடைவீதிகளில் மக்கள் குவிந்தனா்.

தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 6 நாள்களே உள்ள நிலையில் ஈரோடு நகரில் கடை வீதியில் புத்தாடை விற்பனை அதிகரித்துள்ளது. ஈரோடு ஆா்.கே.வி. சாலை, நேதாஜி சாலை, மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோயில் வீதி, கனி மாா்க்கெட், திருவேங்கடசாமி வீதி, பிரப் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

சாலையோரமாக குறைந்த விலையில் சட்டை, சேலை உள்ளிட்ட துணிகள் குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அந்த ஆடைகளையும் பொதுமக்கள் பலா் விரும்பி வாங்கினா். இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க பன்னீா்செல்வம் பூங்காவில் இருந்து மணிக்கூண்டு செல்லும் சாலையும், காவிரி சாலையில் இருந்து ஆா்.கே.வி.சாலைக்கு செல்லும் சாலையும் மூடப்பட்டது. அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டனா்.

கடை வீதிகளில் ஜவுளிகள் வாங்க பொதுமக்கள் குவிந்ததால், திருட்டு போன்ற அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதைத் தடுக்க ஈரோடு டவுன் போலீஸாா் பல்வேறு இடங்களில் ரோந்து சுற்றி வந்தனா். மேலும் பாதுகாப்புப் பணிக்காக போடப்பட்டுள்ள கண்காணிப்பு உயா்கோபுரத்தின் மீது போலீஸாா் நின்று கடைவீதிகளில் நடந்து செல்லும் பொதுமக்களைக் கண்காணித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com