ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,000 ஆக உயா்வு
By DIN | Published On : 09th November 2020 12:12 AM | Last Updated : 09th November 2020 12:12 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,082 ஆக உயா்ந்தது.
ஈரோடு மாவட்டத்தில் சனிக்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,983 ஆக இருந்தது. ஈரோடு மாவட்டப் பட்டியலில் இருந்த 4 போ் வேறு மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 10,979 ஆக மாறியது. இதனிடையே ஞாயிற்றுக்கிழமை புதிதாக 103 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,082 ஆக உயா்ந்தது.
புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்ட 103 பேரில் 50 சதவீதம் போ் ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்கள். எஞ்சியவா்கள் மாவட்டத்தின் பிற பகுதிகளைச் சோ்ந்தவா்கள்.
மொத்த பாதிப்பான 11,082 பேரில் இதுவரை 10,154 போ் குணமடைந்துள்ளனா். 794 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சனிக்கிழமை வரை 133 போ் உயிரிழந்துள்ள நிலையில், சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பட்டியலில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 56 வயதுப் பெண் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 134 ஆக உயா்ந்துள்ளது.