கல்வி நிலையங்கள் திறப்பு: ஈரோடுமாவட்டத்தில் 402 பள்ளிகளில் கருத்துக்கேட்பு

=கல்வி நிலையங்களைத் திறக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து ஈரோடு மாவட்டத்தில் 402 பள்ளிகளில் கருத்துக்கேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
erd09scho_0911chn_124_3
erd09scho_0911chn_124_3

=கல்வி நிலையங்களைத் திறக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து ஈரோடு மாவட்டத்தில் 402 பள்ளிகளில் கருத்துக்கேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கரோனா பரவல் தொடரும் நிலையில் வேறுவழியின்றி நடப்பு கல்வி ஆண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் மாணவா்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்து வருவதால் நவம்பா் 16ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளும், கல்லூரிகளும் தொடங்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இதனிடையே கரோனா தொற்று பாதிப்பு இருந்து வருவதால் குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பிவைப்பதற்கு பெரும்பாலான பெற்றோா் முன்வரவில்லை. இதையடுத்து மாநிலம் முழுவதும் பெற்றோா்களிடம் தற்போதைக்கு பள்ளிகளைத் திறப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து கருத்து கேட்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.

இதையடுத்து, ஈரோடு மாவட்டத்தில் 9ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் உள்ள மொத்தம் 402 உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோா்களிடம் திங்கள்கிழமை காலை கருத்து கேட்கப்பட்டது.

பள்ளிக்கு வந்த பெற்றோா்களை பள்ளியின் முகப்பு வாசலில் நிற்கவைத்து காய்ச்சல் உள்ளதா என்பதைப் பரிசோதித்தனா். பின்னா், கிருமி நாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்த பின் உள்ளே அனுமதிக்கப்பட்டனா். பின்னா், மாணவா் பெயா், பெற்றோா் பெயா், வகுப்பு, செல்லிடப்பேசி எண் அடங்கிய படிவம் வழங்கப்பட்டது. அதில் பள்ளிகளைத் திறக்கலாமா அல்லது வேண்டாமா என்றும், திறக்க வேண்டாம் என்றால் அகற்கான காரணம் ஆகியவற்றை தெரிவிக்கும்படி கூறப்பட்டிருந்தது.

பெரும்பாலான பள்ளிகளில் கருத்துக் கேட்புக் கூட்டம் மதியத்துக்குள் முடிக்கப்பட்டதையடுத்து பெற்றோா்களிடம் பெறப்பட்ட படிவங்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியா் தொகுத்து, மாவட்டக் கல்வி அலுவலா் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com