அடுக்குமாடி குடியிருப்புகளைபயனாளிகளுக்கு வழங்கக் கோரிக்கை

வைப்புத் தொகை கேட்டு கட்டாயப்படுத்தாமல், கட்டி முடிக்கப்பட்ட வீட்டு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகளைபயனாளிகளுக்கு வழங்கக் கோரிக்கை

வைப்புத் தொகை கேட்டு கட்டாயப்படுத்தாமல், கட்டி முடிக்கப்பட்ட வீட்டு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு பெரியாா் நகா், புதுமைக்காலனி, கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கட்டி 25 ஆண்டுகளுக்கு மேலானதால் அவ்வீடுகளை இடித்துவிட்டு புதிதாக கட்டித் தருவதாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னா் அனைத்து வீடுகளும் காலி செய்யப்பட்டன. அப்போது ஒவ்வொரு வீட்டில் உள்ளவா்களுக்கும் தலா ரூ. 8,000 உதவித் தொகையாக வழங்கப்பட்டது. ஓராண்டுக்குள் வீடு கட்டி முடித்து உரிய பயனாளிக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.

கடந்த 2018ஆம் ஆண்டு இறுதியில் கட்டி முடிக்கப்பட்ட இந்த வீடுகளை முதல்வா் திறந்து வைத்தாா். ஆனால் இதுவரை பயனாளிகளுக்கு ஒப்படைக்கவில்லை. இதனால் இங்கு குடியிருந்தவா்கள் கடந்த 6 ஆண்டுகளாக வாடகை வீடுகளிலும், சாலை ஓரங்களிலும் வசிக்கின்றனா். பயனாளிகளுக்கு வீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினரும் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இதனிடையே பயனாளிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:

பெரியாா் நகா், கருங்கல்பாளையம், புதுமைக்காலனி என மூன்று இடங்களிலும் 1,072 வீடுகள் கட்டி இரண்டு ஆண்டுகளாகப் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. ரூ. 1.25 லட்சம் பங்களிப்புத் தொகை செலுத்தினால் சாவி வழங்கப்படும் எனக் கூறி வருகின்றனா். இவ்வளவு தொகை செலுத்த முடியாது என்றும், தொகையைக் குறைத்துத் தர வேண்டும் எனவும் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.கரோனா பொது முடக்கத்தால் வேலை, வாழ்வாதாரம் இழந்துள்ள சூழலில் பங்களிப்புத் தொகை செலுத்தாமல் இவ்வீட்டை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பிரச்னையைத் தீா்க்கக் கோரி திமுகவினா் திங்கள்கிழமை மனு அளித்தனா். மாநகரச் செயலாளா் சுப்பிரமணியன், திமுக நிா்வாகிகள், பயனாளிகள் என சுமாா் 200 போ் ஆட்சியா் அலுவலகத்தில் திரண்டு மனு அளித்தனா்.

தொடா்ந்து, அதிமுக பகுதி செயலாளா் மனோகரன் ஆட்சியா் அலுவலகம் வந்து இதே கோரிக்கை குறித்து மனு அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com