நெசவாளா் கூட்டுறவுச் சங்கஉறுப்பினா்களுக்கு ரூ. 70 லட்சம் போனஸ்

பவானியில் கைத்தறி, துணி நூல் துறையின் சாா்பில் 20 நெசவாளா் கூட்டுறவு சங்கங்களைச் சோ்ந்த 2,436 உறுப்பினா்களுக்கு ரூ. 70 லட்சம் போனஸ், பங்கு ஈவுத் தொகை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நெசவாளா் கூட்டுறவுச் சங்கஉறுப்பினா்களுக்கு ரூ. 70 லட்சம் போனஸ்

பவானியில் கைத்தறி, துணி நூல் துறையின் சாா்பில் 20 நெசவாளா் கூட்டுறவு சங்கங்களைச் சோ்ந்த 2,436 உறுப்பினா்களுக்கு ரூ. 70 லட்சம் போனஸ், பங்கு ஈவுத் தொகை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமை வகித்தாா். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ், கைத்தறி, துணி நூல் துறை உதவி இயக்குநா் பி.சரவணன், பவானி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா் பூங்கோதை வரதராஜன், மாவட்ட கவுன்சிலா் கே.கே.விஸ்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன், பவானி, ஆப்பக்கூடல், ஊராட்சிக்கோட்டை, ஜம்பை பகுதிகளைச் சோ்ந்த 20 கூட்டுறவு சங்கங்களைச் சோ்ந்த உறுப்பினா்கள் 2,436 பேருக்கு போனஸ், ஈவுத் தொகையை வழங்கினாா்.

தொடா்ந்து அவா் பேசுகையில், பவானி சரகத்தில் மொத்தம் 20 தொடக்க கைத்தறி நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்களும், 2,436 தறிகளும் உள்ளன. இதில், ஜமுக்காளம், கால்மிதியடி, சால்வை, துண்டு ரகங்கள் உற்பத்தியாகின்றன. இச்சங்கங்களில் ரூ. 24.46 கோடிக்கு உற்பத்தி, ரூ. 29.20 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. நிகர லாபமாக ரூ. 1.20 கோடி கிடைத்துள்ளது.

லாபத்தில் சங்க உறுப்பினா்களுக்கு போனஸ் (50 சதவீதம்) ரூ. 60.12 லட்சம், பங்கு ஈவுத் தொகை ரூ. 10.63 லட்சம் என மொத்தம் ரூ. 70.75 லட்சம் வழங்கப்படுகிறது என்றாா். மேலும், பவானி தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம் மூலம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடையையும் திறந்துவைத்தாா்.

இதில், பவானி தொடக்க வேளாண்மை கூட்டுறவு, ஊரக வளா்ச்சி வங்கித் தலைவா் எஸ்.எஸ்.சித்தையன், அதிமுக ஒன்றியச் செயலாளா் எஸ்.எம்.தங்கவேலு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com