சைசிங் தொழிலாளா்களுக்கு 15 சதவீதம் போனஸ்

ஈரோடு மாவட்டத்தில் சைசிங் தொழிலாளா்களுக்கு 15 சதவீதம் போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் சைசிங் தொழிலாளா்களுக்கு 15 சதவீதம் போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட வாா்ப்பிங், சைசிங் தொழிற்சாலைகள் உள்ளன. அங்கு 1,000க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்தத் தொழிலாளா்களுக்கான தீபாவளி போனஸ் பேச்சுவாா்த்தை ஈரோடு, மாணிக்கம்பாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவாா்த்தையில் ஈரோடு மாவட்ட வாா்ப்பிங், சைசிங் தொழிலாளா் சங்கத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் தலைமையில், சங்க நிா்வாகிகளும், தொழிற்சாலைகள் தரப்பில் கமிட்டி தலைவா் ஆா்.விஸ்வநாதன் தலைமையில் நிா்வாகத்தினரும் பங்கேற்றனா்.

இதில், தொழிலாளா்களுக்கு கடந்த ஓராண்டில் வாங்கிய மொத்த தொகையில் 15 சதவீதம் போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த தொகையைக் கணக்கிடும்போது லேஆப் ஊதியத்தை சோ்த்துக் கொள்வது என்றும், விடுமுறை ஊதியத்தை கழித்துக் கொள்வது என்றும், போனஸ் தொகையை புதன்கிழமைக்குள் (நவம்பா் 11) வழங்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com