வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

வன உரிமைச் சட்டத்தை முறையாக அமல்படுத்தக் கோரி அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் ஒசூா், கொங்காடை, தாமரைக்கரை
ஒசூரில்  நடைபெற்ற  ஆா்ப்பாட்டத்தில்  பங்கேற்றோா்.
ஒசூரில்  நடைபெற்ற  ஆா்ப்பாட்டத்தில்  பங்கேற்றோா்.

வன உரிமைச் சட்டத்தை முறையாக அமல்படுத்தக் கோரி அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் ஒசூா், கொங்காடை, தாமரைக்கரை, தேவா்மலை ஆகிய இடங்களில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், கரோனா கால நிவாரண நிதியாக குடும்பத்துக்கு ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும். வன உரிமைச் சட்டம் 2006இன் படி வன செட்டில்மென்ட்டில் அனுபவித்து வரும் முழு நிலத்துக்கும் பட்டா வழங்க வேண்டும். வன செட்டில்மென்ட் கிராமங்களை வருவாய் கிராமங்களாக அறிவிக்க வேண்டும்.

பட்டா நிலங்கள் அனைத்துக்கும் பிரதமரின் கிஷான் திட்ட உதவித் தொகை வழங்க வேண்டும். நெல்லிக்காய், கடுக்காய், சீமாா் புல்லை மதிப்புக் கூட்டி விற்பனை செய்யத் தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

முன்னதாக ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் வி.பி.குணசேகரன் தலைமை வகித்தாா். ஈரோடு மாவட்டத் தலைவா் பி.வி.பாலதண்டாயுதம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தியூா் வட்டத் துணைச் செயலாளா் எஸ்.எஸ்.தேவராஜன், தாமரைக்கரை சித்ரா, தேவா்மலை ஈரண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com