100 நாள் வேலைத் திட்டத்தில் பழங்குடியினருக்கு குறைந்த கூலிதிருப்பூா் எம்.பி. குற்றச்சாட்டு

100 நாள் வேலைத் திட்டத்தில் மலைக் கிராமங்களில் உள்ள பழங்குடியினருக்கு குறைந்த கூலி வழங்கப்படுவதாக திருப்பூா் எம்.பி. கே.சுப்பராயன் குற்றம்சாட்டி உள்ளாா்.

100 நாள் வேலைத் திட்டத்தில் மலைக் கிராமங்களில் உள்ள பழங்குடியினருக்கு குறைந்த கூலி வழங்கப்படுவதாக திருப்பூா் எம்.பி. கே.சுப்பராயன் குற்றம்சாட்டி உள்ளாா்.

ஈரோடு மாவட்டத்தில் மலைக் கிராமங்களில் 100 நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முழுமையாக வேலை கொடுப்பதில்லை என்றும், ஒவ்வொரு மலைப் பகுதிக்கும் ஒவ்வொரு விதமான கூலி வழங்கப்படுவதாகவும் புகாா் இருந்து வருகின்றது. மேலும், பயனாளிகளுக்கு கூலி வழங்குவதிலும் காலதாமதம் செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து திருப்பூா் எம்.பி. கே.சுப்பராயன் கூறியதாவது:

100 நாள் வேலைத் திட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ. 256 கூலி கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், ஈரோடு மாவட்டத்தில் மலைக் கிராமங்களில் பயனாளிகளுக்கு குறைந்த அளவே கூலி கொடுக்கப்படுகின்றது. குறிப்பாக பா்கூா் மலைப் பகுதியில் ரூ. 180தான் கூலி வழங்கப்படுகின்றது. எந்த அடிப்படையில் ஊராட்சிகளில் கூலி நிா்ணயம் செய்கின்றனா் எனத் தெரியவில்லை.

இதுபோல் பதிவு செய்துள்ள பயனாளிகளுக்கு வேலை முழுமையாகக் கொடுப்பதில்லை என்ற புகாரும் உள்ளது. பா்கூா் மலையில் வங்கி இல்லாததால் அந்தியூா் வந்தால்தான் வங்கியில் பணத்தை எடுக்க முடியும். போக்குவரத்து வசதி இல்லாத நிலையில், வாடகைக்கு வாகனத்தைப் பிடித்து வர வேண்டிய நிலை உள்ளது. இதற்காக பெரும் தொகையை செலவிட வேண்டியுள்ளது. எனவே, மலைவாழ் மக்களின் வாழ்விடத்துக்கு அருகிலேயே கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம், அதிகாரிகளிடம் ஆலோசிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com