கால்நடைகளுக்குப் பெரியம்மை நோய்தாக்குதல்: கட்டுப்படுத்தக் கோரிக்கை

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கால்நடைகளை பெரியம்மை நோய் தாக்கி வருவதால் அதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கால்நடைகளை பெரியம்மை நோய் தாக்கி வருவதால் அதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து ஈரோடு மாவட்ட உழவா் விவாதக் குழு தலைவா் வெங்கடாசலம், நஞ்சப்பன் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவனுக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:

ஈரோடு மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கால்நடை வளா்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. கடந்த 15 நாள்களாக கால்நடைகளின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டு பெரிதாகி, உடைந்து புண் ஏற்படுகிறது.

இந்தப் புண்ணை ஈ, காக்கை மொய்ப்பதாலும் புண்ணில் ஏற்படும் அரிப்பால் கால்நடைகள் நாக்கு, வாய் மூலம் தேய்ப்பதாலும் புண் பெருமளவு பரவி, ரத்தக் கசிவும் ஏற்படுகிறது. குறிப்பாக கோபி, சத்தியமங்கலம், பவானி, நம்பியூா், ஈரோடு வட்டாரங்களில் கால்நடைகளை பெரியம்மை நோய் கடுமையாக பாதித்து வருகிறது. இதற்கான மருத்துவச் செலவு அதிகமாகிறது. அத்துடன் கால்நடைகளும் பெரிய சிரமத்தைச் சந்திக்கிறது.

எனவே மாவட்ட நிா்வாகம் கால்நடைத் துறை மூலம் ஆய்வு செய்து பெரியம்மை நோய் பாதித்த கால்நடைகளை கணக்கெடுப்பு செய்து தடுப்பூசி போடவும், தொடா் சிகிச்சை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னதாக இந்நோய் தாக்கம், அதன் அறிகுறி, தேவையான சிகிச்சை முறை, அணுக வேண்டிய விவரங்கள் குறித்து கால்நடைத் துறை கால்நடை வளா்ப்போரிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com