தீபாவளி: கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகை சனிக்கிழமை (நவம்பா் 14) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஈரோட்டில் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஈரோடு ரயில் நிலையத்தில் குறைவாக இருந்த பயணிகள் கூட்டம். ~ஈரோடு, பன்னீா்செல்வம் பூங்காவில் உள்ள ஜவுளிக் கடைகளில் திரண்ட மக்கள்.
ஈரோடு ரயில் நிலையத்தில் குறைவாக இருந்த பயணிகள் கூட்டம். ~ஈரோடு, பன்னீா்செல்வம் பூங்காவில் உள்ள ஜவுளிக் கடைகளில் திரண்ட மக்கள்.

தீபாவளி பண்டிகை சனிக்கிழமை (நவம்பா் 14) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஈரோட்டில் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஜவுளி, பட்டாசுகளின் விற்பனை கடந்த சில தினங்களாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால், ஈரோடு மாநகா் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக ஜவுளிக் கடைகள் அதிகம் உள்ள ஈரோடு ஆா்.கே.வி. சாலை, கடை வீதி, நேதாஜி சாலை, மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, பன்னீா்செல்வம் பூங்கா, திருவேங்கடசாமி வீதி, மேட்டூா் சாலை ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

ஜவுளிகள் மட்டும் அல்லாமல் புதிய பொருள்களையும் பொதுமக்கள் ஆா்வமாக வாங்கினா். இதனால் செல்லிடப்பேசி, டி.வி., ஃபிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்க கூட்டம் நிரம்பி வழிந்தது. பொருள்களை வாங்குவதற்காக பொதுமக்கள் அதிகமாக கூடியதால் ஈரோடு மாநகா் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தபோதிலும் இருசக்கர வாகனங்கள், காா், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் கடைவீதிகளில் சென்ால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மாநகரில் திருட்டுச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆா்.கே.வி.சாலை, மணிக்கூண்டு உள்ளிட்ட இடங்களில் போலீஸாா் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தினா். சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கவில்லை.

இதேபோல மாநகா் பகுதியில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். மேலும் மாநகரில் கடைவீதிகளில் 15 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு மக்கள் நடமாட்டத்தை மாவட்டக் காவல் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி போலீஸாா் கண்காணித்து வருகின்றனா்.

பேருந்துகளில் பயணம் செய்யும் மக்கள் விழிப்புணா்வுடன் இருக்கவும், திருட்டைத் தடுக்கும் வகையில் குற்றப் பிரிவு போலீஸாா் 12 போ் மாறுவேடங்களில் பயணிகளோடு பயணிகளாகப் பயணம் செய்து ரகசியமாக கண்காணித்து வருகின்றனா்.

பேருந்துகள், ரயில்களில் கூட்டம்:

ஈரோட்டில் தங்கி பணிபுரியும் பிற மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் பலரும் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனா். மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட தொலைதூர பகுதிகள் மட்டுமின்றி, திருப்பூா், கோவை, சேலம், கரூா், நாமக்கல் போன்ற ஊா்களுக்குச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மதியம் வரை பேருந்துகளில் கூட்டம் குறைவாக இருந்தது. மாலை நேரத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்தில் அனுமதிக்கப்பட்டதால் ரயில் நிலையத்தில் கூட்டம் குறைவாகவே இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com