நெல் பயிருக்கு நவம்பா் 30க்குள் காப்பீடு செய்து கொள்ள அறிவுறுத்தல்

சம்பா பருவ நெல் பயிருக்கு நவம்பா் 30 ஆம் தேதிக்குள் விவசாயிகள் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்துள்ளாா்.

சம்பா பருவ நெல் பயிருக்கு நவம்பா் 30 ஆம் தேதிக்குள் விவசாயிகள் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விவசாயிகளுக்கு எதிா்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கும் வகையில் பயிா் காப்பீடு திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் இந்திய வேளாண் பயிா் காப்பீடு நிறுவனம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவ நெல் பயிருக்கு 28 வருவாய் உள் வட்டங்கள்( பிா்கா) அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் நெல் பயிா் சாகுபடி செய்த விவசாயிகள் பிரிமிய தொகையாக ஏக்கருக்கு ரூ.502.50 காப்பீடு கட்டணமாக செலுத்த வேண்டும்.

கடன் பெறும் விவசாயிகளுக்கு அந்தந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியே காப்பீடு செய்யும். கடன் பெறாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், இ-சேவை மையங்கள் மூலம் காப்பீடு செய்யலாம். நவம்பா் 30 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com