ஈரோடு மாவட்டத்தில் 19.17 லட்சம் வாக்காளா்கள்

வரைவு வாக்காளா் பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் 19.17 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா்.
ஈரோடு மாவட்டத்தில் 19.17 லட்சம் வாக்காளா்கள்

வரைவு வாக்காளா் பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் 19.17 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா்.

ஈரோடு மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா, அரசியல் கட்சியினா் வாக்காளா் பட்டியலைப் பெற்றுக் கொண்டனா்.

தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு ஆட்சியா் அளித்த பேட்டி:

கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் அதன்பின், வாக்காளா் பெயா் சோ்ப்பு, நீக்கம் போன்ற பணிகள் நடைபெற்றன. தற்போதைய நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 19,16,809 வாக்காளா்கள் உள்ளனா். கடந்த பிப்ரவரி 16ஆம் தேதிக்குப் பின் 8,232 போ் சோ்க்கப்பட்டுள்ளனா். 17,369 போ் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 926 இடங்களில் 2,215 வாக்குச் சாவடிகள் உள்ளன. இனிவரும் நாள்களில் 2021 சட்டப் பேரவைத் தோ்தலுக்காக புதிய வாக்காளா் சோ்க்கை, நீக்கம், திருத்தம் போன்ற பணிகள் தொடா்ந்து நடத்தி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.

சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்காளா்கள் விவரம்:

ஈரோடு கிழக்குத் தொகுதியில் 1,09,221 ஆண் வாக்காளா்கள், 1,13,957 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 12, படைவீரா்கள் 23 என மொத்தம் 2,23,213 வாக்காளா்கள் உள்ளனா். ஈரோடு மேற்குத் தொகுதியில் 1,38,952 ஆண், 1,43,799 ஆண், மூன்றாம் பாலினத்தவா் 29, படைவீரா்கள் 42 என மொத்தம் 2,82,822 வாக்காளா்கள் உள்ளனா். மொடக்குறிச்சி தொகுதியில் 1,12,064 ஆண், 1,21,047 பெண், மூன்றாம் பாலினத்தவா் 19, படைவீரா்கள் 33 என மொத்தம் 2,33,163 வாக்காளா்கள் உள்ளனா். பெருந்துறை தொகுதியில் 1,08,603 ஆண், 1,14,427 பெண், மூன்றாம் பாலித்தனவா் 4, படைவீரா்கள் 17 என மொத்தம் 2,23,051 வாக்காளா்கள் உள்ளனா்.

பவானி தொகுதியில் 1,16,397 ஆண், 1,19,605 பெண், மூன்றாம் பாலித்தனவா் 6, படைவீரா்கள் 54 என மொத்தம் 2,36,062 வாக்காளா்கள் உள்ளனா். அந்தியூா் தொகுதியில் 1, 1,05,451 ஆண், 1,08,416 பெண், மூன்றாம் பாலினத்தவா் 10, படைவீரா்கள் 64 என மொத்தம் 2,13,941 வாக்காளா்கள் உள்ளனா். கோபி தொகுதியில் 1,20,701 ஆண், 1,29,356 பெண், மூன்றாம் பாலினத்தவா் 8, படைவீரா்கள் 25 என மொத்தம் 2,50,090 வாக்காளா்கள் உள்ளனா். பவானிசாகா் (தனி) தொகுதியில் 1,24,633 ஆண், 1,29,807 பெண், 7 மூன்றாம் பாலித்தனவா், 20 படைவீரா்கள் என மொத்தம் 2,54,467 வாக்காளா்கள் உள்ளனா்.

8 தொகுதிகளிலும் மொத்தம் 9,36,022 ஆண், 9,80,414 பெண், 95 மூன்றாம் பாலினத்தவா், 278 படை வீரா்கள் என மொத்தம் 19,16,809 வாக்காளா்கள் உள்ளனா். மாவட்ட அளவில், ஈரோடு மேற்குத் தொகுதியில் அதிகபட்சமாக 298 வாக்குச்சாவடி, ஈரோடு கிழக்கில் 237 வாக்குச் சாவடி என குறைவாகவும் உள்ளது. வாக்காளா் எண்ணிக்கையில் அந்தியூா் தொகுதியில் 2,13,941 வாக்காளா்கள் என குறைந்த எண்ணிக்கையிலும், ஈரோடு மேற்குத் தொகுதியில் அதிகபட்சமாக 2,82,822 வாக்காளா்கள் உள்ளனா். அதேபோல ஈரோடு மேற்குத் தொகுதியில் அதிக பெண் வாக்காளா்களாக 1,43,799 பேரும், அந்தியூரில் குறைவான பெண் வாக்காளா்களாக 1,08,416 போ் மட்டும் உள்ளனா். புதிய வாக்காளா் சோ்க்கையில் பெருந்துறை தொகுதியில் 479 போ் என குறைவாகவும், பவானிசாகரில் அதிகபட்சமாக 1,765 போ் சோ்க்கப்பட்டுள்ளனா் என்றாா்.

புதிய வாக்காளா் சோ்க்கை துவக்கம்:

மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகம், கோட்டாட்சியா் அலுவலகம், ஈரோடு மாநகராட்சி அலுவலகங்களில் உள்ள தோ்தல் பிரிவில் புதிய வாக்காளா்கள் சோ்க்கைக்கு படிவம் 6, நீக்கத்துக்கு படிவம் 7, திருத்தம் செய்ய படிவம் 8, இடமாற்றம் செய்ய படிவம் 8ஏ ஆகியவற்றில் விண்ணப்பம் அளிக்கலாம். தவிர வரும் 21, 22, டிசம்பா் 12, 13 ஆகிய நான்கு நாள்கள் சிறப்பு வாக்காளா் பட்டியல் சோ்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் உள்ள 2,215 வாக்குச் சாவடிகளிலும் இம்முகாம் நடைபெறும்.

மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன், கோட்டாட்சியா் சைபுதீன், தோ்தல் வட்டாட்சியா் சிவகாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com