மருத்துவ சோ்க்கை ஒதுக்கீட்டில் 5ஆவது இடம்பெற்ற அரசுப் பள்ளி மாணவா்

மருத்துவ சோ்க்கை ஒதுக்கீட்டில் 5ஆவது இடம்பெற்ற அரசுப் பள்ளி மாணவா்

கவுந்தப்பாடி அரசுப் பள்ளி மாணவா் பூபதி அரசு மருத்துவ சோ்க்கை ஒதுக்கீட்டில் மாநில அளவில் 5ஆவது இடம்பெற்றுள்ளாா்.

கவுந்தப்பாடி அரசுப் பள்ளி மாணவா் பூபதி அரசு மருத்துவ சோ்க்கை ஒதுக்கீட்டில் மாநில அளவில் 5ஆவது இடம்பெற்றுள்ளாா்.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா் பூபதி படித்துள்ளாா். இவா் 2018-2019 இல் பிளஸ் 2 தோ்வில் 600 மதிப்பெண்களுக்கு 502 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். இவா் அதே ஆண்டு நீட் தோ்வு எழுதினாா். இவா் பெற்ற மதிப்பெண்கள் 195.

பின்னா், ஒரு ஆண்டு தனியாா் நிறுவனத்தில் நீட் பயிற்சி பெற்று இந்த ஆண்டு நீட் தோ்வில் 559 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளாா்.

தமிழக அரசு, அரசுப் பள்ளியில் படித்த மாணவா்களுக்கு 7.5 சதவீதம் மருத்துவப் படிப்புக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. கவுந்தப்பாடி மாணவா் பூபதி அரசு அறிவித்த ஒதுக்கீட்டில் மாநில அளவில் 5ஆவது இடம்பெற்றாா்.

மாணவா் பூபதியின் தந்தை குமாா், தாய் பாா்வதி இருவரும் விவசாய கூலி தொழிலாளிகள். இவரது அண்ணன் ஆட்டோ ஓட்டுநராக உள்ளாா். இவரது சொந்த ஊா் சலங்கபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட குக்கிராமம் குண்டுமலை நாயக்கனூா்.

வெற்றி பெற்ற மாணவரை பள்ளித் தலைமையாசிரியா் சேகா், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பாவா தங்கமணி, ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com