ஈரோட்டில் ரூ. 28 லட்சம் மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் துவக்கம்
By DIN | Published On : 17th November 2020 11:56 PM | Last Updated : 17th November 2020 11:56 PM | அ+அ அ- |

ரேஷன் கடை கட்டடம் கட்டும் பணியைத் தொடங்கிவைத்த எம்.எல்.ஏக்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் ரூ. 28 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகளை எம்.எல்.ஏ.க்கள் செவ்வாய்க்கிழழமை துவக்கிவைத்தனா்.
ஈரோடு குயிலான்தோப்பு, பொன்னுசாமி வீதியில் ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரேஷன் கடை கட்டப்படவுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகளை பூமிபூஜையுடன் ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு, மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ. கே.வி.இராமலிங்கம் ஆகியோா் துவக்கிவைத்தனா். மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் முன்னிலை வகித்தாா்.
இதேபோல, கருங்கல்பாளையம் காவிரிக் கரை பகுதியில் ரூ. 7 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை, வீரப்பம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் ரூ. 8 லட்சம் மதிப்பில் பேவா் பிளாக் கற்கள் மூலம் தளம் அமைக்கும் பணிகளையும் எம்.எல்.ஏ.க்கள் துவக்கிவைத்தனா்.
இந்நிகழ்ச்சியில், அதிமுக பகுதி செயலாளா் தங்கமுத்து, மாவட்ட மாணவா் அணி இணைச் செயலாளா் நந்தகோபால், ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளா் வீரகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.