தீபாவளி இனிப்பு மாதிரிகள் சோதனைக்கு அனுப்பிவைப்பு

தீபாவளியின்போது பாலில் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி உள்ளோம் என ஈரோடு மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் டாக்டா் கலைவாணி தெரிவித்தாா்.

தீபாவளியின்போது பாலில் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி உள்ளோம் என ஈரோடு மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் டாக்டா் கலைவாணி தெரிவித்தாா்.

தீபாவளி பண்டிகையின்போது இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும் இடங்களிலும், விற்பனை செய்யும் இடங்களிலும் உணவுப் பாதுகாப்பு உரிமம், சான்று பெற்று விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தவிர செயற்கை வண்ணம் தவிா்த்து, முறையான தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்ட விவர பதிவுடன் பொட்டலங்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தீபாவளியின்போது பல்வேறு கடைகளில் உணவுப் பண்டங்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பிவைத்துள்ளனா்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் டாக்டா் கலைவாணி கூறியதாவது:

தீபாவளிக்கு முன்பு தரமாக, சுத்தமாக உணவுப் பண்டங்களைத் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதன்படி பலகாரங்கள் தயாரிக்கும் இடங்கள், விற்பனை செய்யும் இடங்களிலும் ஆய்வு செய்தோம். தரக்குறைவு, சுத்தம் இல்லாதது போன்றவை கண்டறியப்படவில்லை.

அதேநேரம் பால், பால் பொருள்களால் தயாரிக்கப்பட்ட பலகாரங்களின் மாதிரி, நிறம் உள்ளிட்ட காரணத்துக்காக 50 மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தரமற்றதாக இருந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தீபாவளியின்போது வேறு குறிப்பிடும் வகையிலான தவறு கண்டறியப்படவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com