பவானிசாகா் அணை அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை

பவானிசாகா் அணைப் பகுதியில் இருந்து வந்த ஒற்றை யானை செவ்வாய்க்கிழமை ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
புங்காா் காலனியில் புகுந்த ஒற்றை யானை.
புங்காா் காலனியில் புகுந்த ஒற்றை யானை.

பவானிசாகா் அணைப் பகுதியில் இருந்து வந்த ஒற்றை யானை செவ்வாய்க்கிழமை ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகா் வனப் பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் பவானிசாகா் அணை நீா்த்தேக்கத்துக்குத் தண்ணீா் குடிப்பதற்கு வருவது வழக்கம். கடந்த 4 நாள்களாக ஒற்றை யானை இரவு நேரத்தில் பவானிசாகா் அணை முன்புள்ள பழத்தோட்ட நுழைவாயிலைத் திறந்து புங்காா் கிராமத்துக்குள் நுழைந்து வந்தது. வனத் துறையினா் போராடி விரட்டினாலும் தினமும் இந்த ஒற்றை யானை கிராமத்துக்குள் நுழைவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

இந்நிலையில், பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான பழத்தோட்ட நுழைவாயிலைத் திறந்து இந்த யானை ஊருக்குள் செவ்வாய்க்கிழமை புகுந்தது.

யானை வருவதைக் கண்ட புங்காா் கிராம மக்கள் அலறியடித்து வீட்டுக்குள் புகுந்தனா். யானை சாலையில் மெதுவாக நடந்து சென்று பவானிசாகா் அணை முன்பு உள்ள பவானி ஆற்றில் இறங்கி ஆற்றின் வழியாகச் சென்றது. தினமும் ஒற்றை யானை இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை பட்டப்பகலில் யானை ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனா்.

இந்த யானையை மயக்க ஊசி செலுத்தி அடா்ந்த வனப் பகுதிக்கு கொண்டு சென்றுவிட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com